தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான யோசனைகளை வெளியிடுவதும் பத்திரிகையாளர்களின் கடமை – பிரதமர்

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் உண்மையான செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் வழிகாட்டிகளாகவும் யோசனைகளைத் வழங்குபவர்களாகவும் மாற வேண்டிய கடமை உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஊடகப் பயிற்சியாளர்கள் தயங்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், சிறந்த நிர்வாகத்தை நோக்கிய ஆரோக்கியமான குறைகூறல்கள் மற்றும் விமர்சனங்களை நாட்டின் தலைமைக்கு வழங்க வேண்டும் என்றார்.

MPI-Petronas பெட்ரோனாஸ் மலேசிய ஊடகவியலாளர்கள் விருதுகள் (HKM) 2022 உடன் இணைந்து 2023 மலேசிய பத்திரிகை இரவு நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும்போது இவ்வாறு கூறினார்.

மேலும் வாசிப்பு மற்றும் அறிவைப் பெறுவதில் மக்களின் ஆர்வத்தை வளர்ப்பதற்கு பங்களிக்குமாறு ஊடகப் பயிற்சியாளர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

படிப்பதில் ஆழ்ந்த ஆர்வம் இல்லாவிட்டால், நாட்டில் நடக்கும் கொள்கை, ஆட்சி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மக்களுக்கு சரியான புரிதல் இருக்காது என்று அன்வார் கூறினார்.

மலேசியா மதானி என்ற கருத்தின் அடிப்படையில், மலேசியாவின் திறன்களை ஒரு ஜனநாயக நாடாக மீண்டும் உயர்த்துவதே காலத்தின் சவாலாகும் என்று கூறிய பிரதமர், ஊடகவியலாளர்களால் உந்தப்படும் ‘புதிய’ ஆலோசனைகள் ஆரோக்கியமான விமர்சனங்கள் மூலம் மட்டுமே ஜனநாயக சுதந்திரத்தை உயர்த்த முடியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here