நடிகை ரோஜா மருத்துவமனையில் திடீர் அனுமதி

90 களில்முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் தான் நடிகை ரோஜா. இவர் 1992 -ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரஷாந்த் நடிப்பில் வெளியான “செம்பருத்தி” என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர், சமீபகாலமாக முழு நேர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

நடிகை ரோஜா அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி.. என்ன காரணம் தெரியுமா ? | Actress Roja Admitted In Hospital

இந்நிலையில் ரோஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு (09-06-2023) அனுமதிக்கப்பட்டார். ரோஜாவுக்கு கால் வீக்கம் காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here