நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரா காஜல் அகர்வால்?

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வாலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் தமிழில் நடித்த நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, விவேகம், மெர்சல், ஹேய் சினாமிகா போன்றவை வெற்றி படங்களாக அமைந்தன.

இந்த நிலையில் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காஜல் அகர்வாலுக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நீல் என்று பெயர் வைத்துள்ளனர். பிரசவத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இதனால் வளரும் குழந்தைக்கு முழுமையான தாயின் அன்பை கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் அவருக்குள் இருக்கிறது. இதையடுத்து குழந்தைக்காக சினிமாவை விட்டு முழுமையாக விலக காஜல் அகர்வால் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காஜல் அகர்வால் முடிவை அவரது கணவரும் வரவேற்று உள்ளாராம்.

சினிமாவுக்கு முழுக்கு போடும் முடிவை காஜல் அகர்வால் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக பகவத் கேசரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களோடு நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று தெலுங்கு திரையுலகில் பேசுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here