தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு காலமானார்

தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு. இவர் நடிகர் தனுஷ் நடித்துள்ள படிக்காதவன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆதரவற்ற நிலையில் இருந்த அவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் மருத்துவ உதவிகள் செய்துவந்தார்.

இந்நிலையில், துணை நடிகர் பிரபு இன்று காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலமான துணை நடிகர் பிரபுவின் உடலை மருத்துவ உதவிகள் செய்த இசையமைப்பாளர் டி.இமான் தகனம் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here