ஈப்போவிலுள்ள குனுங் செமாங்கோல் அருகே உள்ள புக்கிட் செமாங்கோல், ஜாலான் குபு கஜாவில் உள்ள இரண்டு ஹெக்டேர் வனப்பகுதியில் இன்று தீப்பிடித்தது.
மாலை 4.37 மணியளவில் தீ விபத்து குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது என்று, பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குனரான சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.
தகவல் கிடைத்ததும், பாகன் செராய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் ஒரு குழு அப்பகுதிக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
“சம்பவ இடத்தில் தீ சுவாலையோடு பற்றி எரிந்து மலையின் உச்சிக்கு பரவியது, “ஆரம்பத்தில் 10×10 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டுமே தீ ஏற்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, மேலும் புக்கிட் செமாங்கோலில் உள்ள காட்டின் மற்ற பகுதிகளுக்கு தீ தொடர்ந்து பரவாமல் இருக்க தீயை அணைக்க முயற்சிக்கிறோம்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், தீயை அணைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் சபரோட்ஸி கூறினார்.