இத்தாலி அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் 40 பேர் மாயம்

இத்தாலிய தீவான லெம்பெடுசா அருகே படகு ஒன்று கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் காணாமல் போனதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

அவர்களில் புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்றும் இருப்பதாக அந்த அமைப்பின் இத்தாலியப் பிரதிநிதியான சியாரா கார்டொலெட்டி தெரிவித்துள்ளார்.

டுனிசியிாவின் எஸ்ஃபாக்ஸ் என்னுமிடத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை 46 குடியேறிகளுடன் அந்தப் படகு புறப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்தக் குடியேறிகள் மெகரூன், பர்கினா ஃபாசோ மற்றும் ஐவரி கோஸ்ட்டைச் சேர்ந்தவர்கள்.

பலத்த காற்று மற்றும் கடுமையாக வீசிய அலைகள் காரணமாக படகு கவிழ்ந்தது. உடனடியாக காப்பாற்றப்பட்ட சிலர் டம்பெடுசாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்னும் சிலர் டுனீசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். உயிர் பிழைத்த அனைவரும் ஆண்கள்.

மாயமாகிவிட்டோரில் ஏழு பெண்களும் ஒரு சிறு வயதுப் பிள்ளையும் உள்ளனர்.

இத்தாலி, கிரீஸ் மற்றும் ஸ்பெயினில் ஏற்கெனவே குடியேறிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து விபத்துகள் நிகழ்ந்திருக்கும் வேளையில் இது தொடருவது கவலை தருவதாக உள்ளது என்று திருவாட்டி கார்டொலெட்டி கூறினார்.

டுனிசிய கடலோரப் பகுதியில் இருந்து 145 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெம்பெடுசா குடியேறிகளின் மையமாக விளங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here