ஒரே நாளில் சகோதரியையும் சகோதரரையும் இழந்த நடிகர்

ஒரே நாளில் நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரரும் சகோதரியும் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் சின்னத்திரை நடிகர் சங்க தலைவரும் ஆவார்.

இவரது சகோதரி வளர்மதி மாரடைப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவர்களது இல்லம் சென்னை எம்எம்கே பகுதியில் உள்ளது. இந்த இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக போஸ் வெங்கட்டின் சகோதரரான ரங்கநாதன் சென்னை வந்துள்ளார்.

இந்த நிலையில் இறுதி சடங்கில் பங்கேற்ற ரங்கநாதன் தன்னுடைய சகோதரியை பார்த்து கதறி அழுதுள்ளார். அப்போது திடீரென அவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு சகோதரியின் உடல் மீதே அவரும் மரணம் அடைந்தார். அவர்களது இறுதி ஊர்வலம் அறந்தாங்கியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் திரையுலகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகத்தினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here