திருமண வதந்திகள்… கீர்த்தி சுரேஷ் வருத்தம்

நடிகை கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. கேரள தொழில் அதிபரை மணக்க இருப்பதாக கூறினர். பின்னர் துபாய் தொழில் அதிபரோடு இணைத்து பேசப்பட்டார்.

இதற்கு குடும்பத்தினர் ஏற்கனவே மறுப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் திருமண வதந்திகள் குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்துள்ள பேட்டியில், “என் திருமணத்தில் என்னை விட மற்றவர்கள் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் எனக்கு திருமணமே செய்து வைத்து விட்டார்கள்.

ஏன் இப்படியெல்லாம் வதந்தி பரப்புகிறார்கள் என்று புரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றார். மேலும் கீர்த்தி சுரேஷ் கூறும்போது, நடிகையர் திலகம் படத்தில் நடித்ததும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனாலும் தொடர்ந்து 6 மாதங்கள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தேன்.

கமர்ஷியல் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. ஆனால் பெண்களை முதன்மைப்படுத்தும் கதாபாத்திரங்களே வந்தன. இதனால் வந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here