வரும் மாநிலத் தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில் திரெங்கானு மாநில சட்டப் பேரவை நாளை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்படுகிறது.
இன்று காலை இஸ்தானா சியார்கியாவில் நடைபெற்ற சந்திப்பின்போது, திரெங்கானு ஆளுநர் சுல்தான் மிசான் ஜைனால் அபிடின் தம்மால் முன்மொழியப்பட்ட தேதிக்கு ஒப்புதல் அளித்ததாக, அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் சம்சூரி மொக்தார் கூறினார்.
திரெங்கானு அரசியலமைப்பின் சட்டங்களின் பிரிவு 44 (2) அடிப்படையில், மாநில சட்டசபையை கலைக்கும் அதிகாரம் மாநில சுல்தானுக்கு உள்ளது என்று, அஹ்மட் சம்சூரி ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறினார்.