அணையில் மீழ்கிய இரு மகன்களை காப்பாற்ற முயன்ற தந்தை உள்ளிட்ட 4 பேர் பலி

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் ஜீலம் நகரில் ராஜா காலித் அணை உள்ளது. விடுமுறையை முன்னிட்டு பொழுதுபோக்குவதற்காக இங்கு ஏராளமானோர் குடும்பத்துடன் சென்றிருந்தனர்.

அதன்படி அங்குள்ள நீதிபதி ஒருவரும் தனது 2 மகன்கள் மற்றும் மைத்துனருடன் அணைக்கு குளிக்க சென்றார். அணையில் குளித்து கொண்டிருந்தபோது அந்த 2 சிறுவர்களும் நீரில் தத்தளித்தனர். இதனையடுத்து அவர்களை காப்பாற்றுவதற்காக நீதிபதியும், அவரது உறவினரும் முயன்றனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக 4 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் அங்கு சென்று அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகன்களை காப்பாற்ற முயன்றபோது நீதிபதியும் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here