மாநில தேர்தல் தொடர்பில் ஜூலை 5ம் தேதி கூடுகிறது தேர்தல் ஆணையம்

நாட்டின் ஆறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் மற்றும் வாக்குப்பதிவு தேதிகளை தீர்மானிக்க தேர்தல் ஆணையம் வரும் புதன்கிழமை (ஜூலை 5) சிறப்பு கூட்டத்தை நடத்துகிறது.

சம்பந்தப்பட்ட மாநில சட்டசபைகளில் பெரும்பாலானவை கலைக்கப்பட்டுள்ளன, ஏனையவை கலைக்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைய செயலர், டத்தோ இக்மல்ருடின் இஷாக் கூறினார்.

மேலும் தேர்தல் ஆணையத்தின் தலைவர், டான்ஸ்ரீ அப்துல் கனி சாலே இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார் என்று அவர் இன்று திங்கள்கிழமை (ஜூலை 3) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளாந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய ஆறு மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here