மோட்டார் சைக்கிள் பந்தயம் ; ஒருவர் பலி-ஒன்பது பேர் காயம்

காஜாங் – சிரம்பான் நெடுஞ்சாலையில் (லேகாஸ்) நேற்று இரவு சைக்கிள்களில் பயணித்து, பல்வேறு ஆபத்தான சாகசங்களைச் செய்த ”மோட்டார் சைக்கிள் சாகசக் குழுவினர்” விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார், ஒன்பது பேர் காயமடைந்தனர்.

‘சூப்பர்மேன் ஸ்டண்ட்’ செய்து கொண்டும், ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டும், அபாயகரமான சாகசங்கள் செய்த மோட்டார் சைக்கிள் சாகசக் குழுவின் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

வைரலான வீடியோவின் அடிப்படையில், ‘மோட்டார் சைக்கிள் சாகசக் குழு’ ஒன்று நேற்று இரவு 10 மணி முதல் ஆபத்தான செயலைச் செய்யத் தொடங்கியது, இது நெடுஞ்சாலை வழியாகச் சென்ற காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவாகியுள்ளது.

சாலையில் ஆபத்தான முறையில் பயணித்ததால், 10 மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நிலாய் மாவட்ட காவல்துறை தலைமையகம் ஒரு ஊடக அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here