பேங்காக், கடந்த 2014ஆம் பிரயுத் ஓச்சா அப்போது ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக ஆட்சியைக் கைப்பற்றினார். இவர் தாய்லாந்து பிரதமராக கடந்த 9 ஆண்டுகளாக பொறுப்பு வகித்தவர்.
2019 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சி முதலிடம் பிடித்தது. எனினும், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அவர் அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரயுத் கூறியுள்ளதாவது: கட்சித்தலைமையிலிருந்து விலகுவதன் மூலம், அரசியலில் இருந்து முழு நேரமாக விலகுவதாக முடிவு செய்துள்ளேன்.
கட்சியின் பிற தலைவர்களும், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கட்சிக்கொள்கையை முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.