தமிழ்நாட்டின் கோவில்பட்டியில் முட்டை மீது அமர்ந்து சிறார்கள் யோகாசனம் செய்தது பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.
கோவில் பட்டியில் உள்ள சுவாமி விவேகானந்த யோகா கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது சிறார்கள் யோகாசனம் செய்து பாராட்டுகளைப் பெற்றனர்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தைகளுக்கு வலிமையும் துணிச்சலும் தேவை என்பதை வலியுறுத்தி யோகா விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது ரவீணா என்ற சிறுமி முட்டைகள் மீது படுத்திருக்க, அவர் மீது அமர்ந்து சிறுவன் சாய் விஸ்வா யோகா ஆசனங்கள் செய்தார். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.