21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் RM100 e-wallet வரவு -பிரதமர் அறிவிப்பு

ஆண்டு வருமானம் RM100,000 அல்லது அதற்கும் குறைவாக உள்ள, 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் அரசாங்கம் RM100 e-wallet வரவு (credit) வழங்குவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

சுமார் RM1 பில்லியன் ஒதுக்கீட்டை உள்ளடக்கிய இந்த முன்முயற்சி மூலம், B40 மற்றும் M40 குழுக்கள் உட்பட 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள் என்று பிரதமர் கூறினார்.

“e-wallet வரவு திட்டத்தின் வெற்றி மற்றும் அது சமூகத்தில் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தைப் பார்த்து, ஆண்டுக்கு RM100,000 மற்றும் அதற்குக் குறைவான வருமானம் கொண்ட 21 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் RM100 e-wallet வரவு வழங்குவதற்கு அரசாங்கம் ஒப்புக்கொண்டது என்று, மக்களுக்கு பொருளாதார வசதி வாய்ப்பினை வழங்கும் மடானி வெளியீட்டு விழாவில் இன்று உரையாற்றும்போது அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here