நிபோங் தெபால் தொகுதிக்கு உட்பட்ட ஜாவி,சுங்கை பாக்காப் ,சுங்கை ஆட்சே ஆகிய தொகுதிகளுக்கான சட்டமன்ற உறுப்பினர்களின் தேர்தலில் நேரடிப் போட்டி நிகழ்கிறது. இன்று தென் செபராங் பிறை மாவட்ட இலாக்காவில் நடைபெற்ற வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் ஜாவி தொகுதிக்கான வேட்புமனு தாக்கலில் பராமரிப்பு சட்டமன்ற உறுப்பினரான இங் மூய் லாயை எதிர்த்து தேசிய கூட்டணியின் சார்பில் பாஸ் கட்சியைச் சேர்ந்த கோ தியன் இயோ ( Koh Tien Yew ) வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அதே வேளையில் சுங்கை பாக்காப் தொகுதிக்கான வேட்புமனு தாக்கலில் பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த பிகேஆர் கட்சியின் பினாங்கு மாநில மகளிர் தலைவி நோர்ஹிடாயா பிந்தி சே ரோஸ் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு எதிராக தேசியக் கூட்டணியின் சார்பில் பாஸ் கட்சியைச் சேர்ந்த நோர் ஸம்ரி லத்திப் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். நோர்ஹிடாயா பிந்தி சே ரோஸிற்கு தார்மீக ஆதரவை வழங்கும் வகையில் நிபோங் தெபால் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி அமைச்சருமான ஃபட்லினா சிடேக் கட்சியின் ஆதரவாளர்களுடன் வருகைத் தந்தார்.
இதற்கிடையே சுங்கை ஆட்சே தொகுதியில் பராமரிப்பு சட்டமன்ற உறுப்பினரான ஸுல்கிஃப்லி பின் இப்ராஹிம் தேசிய கூட்டணியின் சார்பில் பெர்சத்து கட்சியின் சார்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.இத்தொகுதில் அவரை எதிர்த்து ஒற்றுமைக் கூட்டணியின் சார்பில் தேசிய முன்னணியின் அம்னோவைச் சேர்ந்த ரஸிடி ஜைனால் வேட்புமனு தாக்கல் செய்தார்.
– கவின்மலர்