தென்கொரியாவில் கடும் வெப்பம் – 11 பேர் பலி

சோல், ஜூலை 31:

தென்கொரியாவில் கடும் வெப்பத்தால் ஏற்படும் உடல்நலக்கோளாறு காரணமாக 11 பேர் மாண்டனர். சென்ற வாரயிறுதியில் மட்டும் நால்வர் இறந்தனர் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

வெப்பம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரில் பெரும்பாலோர் பசுமை இல்லங்களிலும் பண்ணைகளிலும் இறந்த நிலையில் கண்டறியப்பட்டனர். அங்கு அன்றாட வெப்பநிலை 33 டிகிரி செல்சியசிலிருந்து 36 டிகிரி செல்சியஸ்வரை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் பலரும் 70 வயதைத் தாண்டியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை மட்டும் கடும் வெயில் காரணமாக எழுவர் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்தது. மேலும் நான்கு இறப்புகள் ஞாயிற்றுக்கிழமை பதிவாகின.

சென்ற வாரயிறுதியில் நால்வர் கடல், மலை நீரோடைகளில் மூழ்கி மாண்டுபோனதாகக் கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here