கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த பயணியிடம் இருந்து 47 மலைப்பாம்புகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து வந்த இந்திய நாட்டவரிடமிருந்து 47 மலைப்பாம்புகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பயணிகளின் சாமான்களில் மலைப்பாம்புகள் மற்றும் இரண்டு பல்லிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இந்தியாவின் சுங்கம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களின் கீழ் இந்த ஊர்வன பறிமுதல் செய்யப்பட்டு மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்படும் என்று உள்ளூர் ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி, ஜூலை 29 அன்று பாதேக் ஏர் விமானத்தில் வந்தார். வனவிலங்கு கடத்தல்காரர்கள் பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து இந்தியாவிற்கு ஊர்வனவற்றை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.

ஏப்ரல் மாதம், சென்னை விமான நிலைய அதிகாரிகள் கோலாலம்பூரில் இருந்து வந்த ஒரு ஆடவரின் பயணப்பெட்டியில் 22 பாம்புகளைக் கண்டுபிடித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here