லியோவின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி மலேசியாவில் நடக்கவுள்ளதா?

இந்திய நட்சத்திர நடிகரான விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘லியோ’ சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ளது.

லியோ படக்குழு செப்டம்பர் மாதம் மலேசியா, கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலிலில் 85,000 மேல் அமரும் திறன் கொண்ட நேஷனல் ஸ்டேடியத்தில் முன் வெளீட்டு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தெறியவந்துள்ளது. இருப்பினும், தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

த்ரிஷா கிருஷ்ணன், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

இத்திரைப்படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி உலகளவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here