2 பில்லியன் ரிங்கிட்டிற்கும் மேலான பரிவுபொருளாதார விரிவாக்கத் திட்டம்

 

சிலாங்கூர் மக்களுக்கு பெரிக்காத்தான் நேஷனலின் வாக்குறுதி

இம்மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ள சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான்நேஷனல் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் அம்மாநில மக்களுக்கு 2 பில்லியன் ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட மதிப்பில் பரிவு பொருளாதார விரிவாக்கத்திட்டம் செயல்படுத்தப்படும் என கூட்டணித் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் உறுதியளித்தார்.

வெள்ளிக்கிழமை இரவு ஷா ஆலமில் உள்ள விடுதிஒன்றில் சிலாங்கூர் மாநி லத்திற்கான பெரிக்காத்தான் நேஷனல் வாக்குறுதி அறிமுக நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் முஹிடின் யாசினுடன் பெர்சத்துகட்சித் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் ரட்ஸிஜிடின், சிலாங் கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் தொடர்புக்குழுத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட்அஸ்மின் அலி, சிலாங்கூர் மாநில பாஸ் தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ டாக்டர் அமாட்யூனுஸ் ஹைரி, சிலாங்கூர் மாநில கெராக்கான் தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ ஹென்ரி தியோகியேன் ஹோங் உள் ளிட்ட முக்கியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

புதிய சிலாங்கூர், நமது எழுச்சி

இந்த 2 பில்லியன் ரிங்கிட்டிற்கும் மேற்பட்டமதிப்பிலான பரிவு பொருளா தார விரிவாக்கத்திட்டத்தில் 7 முக்கிய கூறுகள் உள்ளடங்கியுள்ளன. அதில் 25 முன்னெடுப்புகளும் 112 இணைத்திட்டங்களும் அடங்கியுள்ளன.

சமூகத்தின் சுபிட்சத்தை விரிவுபடுத்துவது, மக்களின் வாழ்வாதாரத்தைச் சுபிட்சப்படுத்துவது, தூய்மையானஅரசியல், நிர்வாகக் கொள்கையை தூக்கிப் பிடிப்பது, வலுவான எதிர்காலப் பொருளாதாரம், மாநிலப்பொருளாதாரம்சமூ கத்தின் முக்கிய தூண்கள்மகளிர், ஆக்கப்பூர்வமான கட்டமைப்புசுற்றுச் சூழல்ஆகிய 7 கூறுகள் அவையாகும்.

சிலாங்கூர் மக்கள் மீது பரிவு

தற்போது சிலாங்கூர் மாநில மக்கள் எதிர்நோக்கும்முதன்மை பிரச்சினை வாழ்வாதார செலவினநெருக்கடிமந்தமான மாநிலப் பொருளாதாரச் சூழல் என்பதை பெரிக்காத்தான் நேஷனல் உணர்கின்றது.

மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை களுக்குஆக்கப்பூர்வமான முழுமையான தீர்வு வழங்குவதில் மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் ஆக்கப்பூர்வமாகச் செயல் படாததால் இவ்விவகாரம் நீடிக் கின்றது. அதிலும் பொருள் விலை யேற்றம், வரு மான பாதிப்பு, வர்த்தக முடக்கம் குறித்து பலரும் என்னிடம் முறையிடுகின்   றனர்.

மக்களின் நிலை அறிய நானே களம் இறங்கினேன்.அப்போது மக்கள் நடப்பு அரசாங்கத்தின் மீது அதிருப்தியை மட்டும் கொண்டிருக்கவில்லை. மாறாக ஆத்திரமும் கொண்டுள்ளனர் என்பதைத் தெளிவாகப்புரிந்துகொள்ள முடி கின்றது.

எனவே இந்த சட்டமன்றத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை வென்றெடுத்தால் நாங்கள்(பெரிக்காத்தான் நேஷனல்) மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத் தவும் அவர்களைப் பொருளாதாரசமூக சவால்களில் இருந்து மீட்கவும் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவோம் எனமுஹிடின் யாசின் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மக்களின் பிளவுபடாத ஆதரவு

இந்த சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில்மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், மற்றஇனத்தவர் என அனைவரின் ஒருமித்த ஆதரவோடு பெரிக் காத்தான் நேஷனல் பெரும்பான்மையில்வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என நம்புகின்றேன்.

அந்த மாநில அரசு எந்தவொரு களங்கமும் இன்றிமக்களின் தேவை அறிந்து செயல்படும் நிலையானஅரசாங்கமாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்றார் அவர்.

வாக்குறுதிகளுள் சில

சிலாங்கூர் குடும்பப் பரிவு உதவித்திட்டம்

அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு 65 ஆயிரம்குடும்பங்களுக்கு மாதந்தோறும் 400 ரிங்கிட் உதவித்தொகைவழங்கப்படும். இதற்கு மொத்தமாக 312 மில்லியன் ரிங்கிட் நிதிஒதுக்கப்படுகிறது.

சிறுபான்மையினருக்கு 50 மில்லியன் ரிங்கிட்

சிலாங்கூர் மாநிலத்தில் வசிக்கும் சிறுபான்மையினரின் சமூகப்பொருளாதாரத் தரத்தை உயர்த்தும் முயற்சிகளை வலுப்படுத்தமாநில அரசாங்கத்தின் கீழ் பிரத்தியேக இலாகாஉருவாக்கப்படும். அதன்மூலம் 50 மில்லியன் ரிங்கிட் நிதிவழங்கப்படும்.

20 மீட்டர் கன அளவு இலவச நீர்

மாதந்தோறும் 15,000 ரிங்கிட்டிற்கும் குறைவானவருமானத்தைப் பெறும் குடும்பத்தினருக்கு 20 மீட்டர் கனஅளவு இலவச நீர் விநியோகம் விரிவாக்கம் செய்யப்படும்.

பெ..சங்க உதவி நிதி

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும்ஆண்டுக்கு 5 ஆயிரம் ரிங்கிட் என பெ..சங்க உதவி நிதிவழங்கப்படும். இதற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படும்.

குறைந்த 2 மாத சிறப்பு அலாவன்ஸ்

சிலாங்கூர் மாநில பொதுச்சேவை ஊழியர்கள் அனைவருக்கும்குறைந்தது 2 மாத சிறப்பு அலாவன்ஸ் தொகை வழங்கப்படும்.

ஹிஜ்ரா மைக்ரோ கடன்திட்டத்திற்கு 500 மில்லியன் ரிங்கிட்

10,000க்கும் மேற்பட்ட சிறு தொழில்முனைவோருக்கு பயன்அளிக்கும் வகையில் 500 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலானசுழற்சி நிதி வர்த்தக முதலீட்டுக்காக வழங்கப்படும்.

வீட்டு வரி விலக்கு

மலிவுவிலை வீடுகள், பாரம்பரிய கிராம வீடுகள், பாகான் கிராமவீடுகளுக்கு வீட்டு வரி விலக்களிக்கப்படும். 5 ஆண்டுகாலத்திற்கு இந்த விலக்கு வழங்கப்படும்.

சுகாதாரப் பரிவுத்திட்டம்

அடிப்படை மருத்துவ வங்தி, தக்காஃபுல் காப்புறுதி பாதுகாப்புஏற்படுத்தித் தரப்படும். இத்திட்டத்தின் மூலம் 250,000 பேர்பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 மில்லியன் ரிங்கிட் சிலாங்கூர் சுபிட்ச சிறப்பு நிதி

பல இன மக்களின் சுபிட்சத்தை வலுப்படுத்தும்நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு சாரா இயக்கங்களுக்குசிலாங்கூர் சுபிட்ச சிறப்பு நிதியாக 10 மில்லியன் ரிங்கிட்வழங்கப்படும்.

டாருல் ஏசான் சுபிட்ச மையம்

ஒவ்வொரு மாநிலங்களிலும் மனநல சேவை, சிறுநீர்சுத்திகரிப்பு சிகிச்சை மறுவாழ்வு மைய சேவைகள் ஏற்படுத்தித்தரப்படும்.

சிலாங்கூரில் பிறக்கும் குழந்தைக்கு சிறப்பு நிதி

சிலாங்கூர் மாநிலத்தில் பிரசவிக்கும் தாய்மார்களுக்குநேரடியாக 500 ரிங்கிட் நிதி வழங்கப்படும்.

பராமரிப்பு மையங்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி

வேலை இடங்களில் புதிய பராமரிப்பு மையங்களைத்திறப்பதற்கு மாநில அரசு இலாகா, தனியார் நிறுவனங்களுக்கு50 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி வழங்கப்படும்.

மாணவர்களுக்கு 100 ரிங்கிட் பேருந்து கட்டண நிதி

உதவிகள் தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரம்மாணவர்களுக்கு (சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்) மாதந்தோறும் 100 ரிங்கிட் பள்ளிப் பேருந்து கட்டண நிதிஉதவி வழங்கப்படும்.

வனித்தா வாஜா திட்டம்

வனித்தா வாஜா திட்டத்தின் வழி கணவரைப் பிரிந்து வாழும்பெண்கள், கணவரை இழந்தவர்களுக்கு 500 ரிங்கிட் சிறப்புநிதி 3 மாதங்களுக்கு வழங்கப்படும். இது தவிர கவுன்சிலிங், தன்முனைப்பு, திறன் பயிற்சிகளும் இந்தப் பிரிவினருக்குவழங்கப்படும்.

மக்கள் பரிவு கடைகள்

நியாய விலையில் அத்தியாவசிய உணவுகளை வழங்குவதற்குமக்கள் பரிவுக் கடைகள் தோற்றுவிக்கப்படும்.

சிலாங்கூர் பரிவு பராமரிப்புத் திட்டம் (ஏபிஎஸ்)

உதவிகள் தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த 65,000 குழந்தைகளுக்கு மாதந்தோறும் 150 ரிங்கிட் சிறார் கட்டணநிதியுதவி வழங்கப்படும்.

சிலாங்கூரை சிறந்த ஆக்கப்பூர்வமான மாநிலமாக உருவாக்குவோம் அஸ்மின் அலி நம்பிக்கை

இந்த சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுஆட்சி அமைத்தால் சிலாங்கூர் SUPER SMAR STATEஆக (சிறந்த ஆக்கப்பூர்வமான மாநிலம்) உருவாக்குவோம் எனமாநில பெரிக்காத்தான் நேஷனல் தொடர்புக்குழுத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி சூளுரைத்தார்.

குறிப்பாக சிலாங்கூர் மாநில இளைய தலைமுறையினருக்குத்தரமிக்க வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதோடு உயர்தொழில்நுட்பதிறன்கொண்ட அந்நிய முதலீடுகளை ஈர்க்கும்முன்னெடுப்புகளும் பரந்த அளவில் மேற்கொள்ளப்படும்.

தற்போதைய மாநில அரசாங்கம் உயர் தொழில்திறன் மிக்க முதலீட்டுகளை ஈர்ப்பதில் தோல்வி கண்டுள்ளது. அதேசமயம்வழக்கில் உள்ள முதலீடுகளும் அந்நியத் தொழிலாளர்களின்ஆள்பலத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இந்நிலை நீடித்தால் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்க ளுக்குத் தரமிக்க திறன்வாய்ந்த வேலைகளில் இணைவதற்கான வாய்ப்புகள் கிடைக்காது என்றுவெள்ளிக் கிழமை நடைபெற்ற சிலாங்கூர் மாநிலமக்களுக்கான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் வாக்குறுதி அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றிய அஸ்மின் அலிவிவரித்தார்.

கடந்தாண்டு நான் முதலீட்டு, வர்த்தக, தொழில்துறைஅமைச்சர் பொறுப்பில் இருந்தபோது சிலாங்கூர் மாநிலம்சிறந்த அடைவுநிலையைப் பதிவுசெய்தி ருந்தது.

அச்சமயத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் பெரிக்காத்தான்நேஷனல் ஆட்சி நடத்தாவிட்டாலும் நான் மத்திய அமைச்சர்என்ற முறையில் AMAZON WEB SERVICES (AWS) முதலீட்டைக் கொண்டுவந்தேன்.

இம்மாநிலத்திற்கு 25 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலானமுதலீட்டை நாங்கள் ஈர்த்துவந்தோம். அச்சமயத்திலேயேஎங்களால் செய்ய முடிந்தது என்று இந்தச்ட்டமன்றத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை வென்றெடுத்தால் அதனை இன்னும் உயர்நிலைக்குக் கொண்டுசெல்ல முனைவோம்என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here