ஆன்லைன் கல்வி முறை ஒரு மாற்று வழி

பள்ளிப் படிப்பை முடித்த பல மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர முனையாத கவலை அளிக்கும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.மலேசியா ஏற்கெனவே Brain Drain விகித சவாலை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இந்தச் சவால் விகிதம் 5.5 விழுக்காடாக உள்ளது.இது உலக அளவில் உள்ள மக்கள் எண்ணிக்கையில் சராசரியான 3.3 விழுக்காட்டு விகிதத்தைவிட அதிகம். இந்தச் சூழல் மலேசியப் பொருளாதாரத்தை மேலும் வீழ்ச்சி அடையச் செய்யக்கூடும்.இங்குதான் ஆன்லைன் கற்றல் முறையானது ஒரு மாற்று செயல்பாடாக உள்ளது. பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் முழு நேரப் பணியில் ஈடுபட்டு உங்கள் மதிப்பாற்றலை அதிகரிக்க பகுதி நேரமாகக் கல்விப் பயிலலாம்.

ஒருவேளை நீங்கள் வேலை செய்பவராக இருந்தால் உங்கள் திறனை உயர்த்துவதற்குப் பகுதி நேரமாகக் கல்வி கற்கலாம். இந்நிலையில் Open University Malaysia (OUM)பல்கலைக்கழகம் மலேசியர்களுக்கு ஏற்புடைய, வசதிமிக்க ஆன்லைன் கல்வி முறையை வழங்குகின்றது.மாணவர்கள் APEL எனப்படும் முன் அனுபவ கல்வி அல்லது வழக்க நிலையில் இந்தப் பல்கலைக்கழகத்தில் பயில இணையலாம். APEL கல்வி முறையானது உங்களின் பணி அனுபவம், அறிவு, திறன்களைக் கணக்கில் எடுத்துக்கொள்கின்றது.அதிலும் APEL மூன்று வகைப்படும். APEL. A  என்பது மாணவர் பதிவிற்கானது. APEL. C என்பது விரைவாகக் கல்வியைக் கற்று பட்டம் பெறுவதற்கான பாடத் திட்ட பரிமாற்றமாகும்.தொடர்ந்து APEL. Q என்பது பணி அனுபவத்தின் அடிப்படையில் கல்வி தகுதிகளை வழங்கும் செயல்முறையாகும்.கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு வரை இடைப்பட்ட 13 ஆண்டுகளில் 33,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் APEL செயல்முறை வழி இப்பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ளனர்.

வசதிகரமான பதிவுக்குப் பிறகு அதேபோல் வசதிமிக்க கற்றல் செயல்முறை வருகிறது. மாணவர்கள் தங்கள் கல்வி, அது சார்ந்த விவரங்களை ஆன்லைனில் மெய்நிகர் முறையில் அணுகலாம். எனவே அவர்கள் தங்களின் வேலை அட்டவணைக்கு ஏற்ப கல்வியைப் பயில முடியும்.இது தவிர மின்னியல் கற்றல், கற்பித்தல் அணுகுமுறையையும் மாணவர்கள் பெறுவர். திட்டமிட்ட நேரத்தில் நீங்கள் அந்த வகுப்புகளில் இணைய முடியும். இல்லையென்றால் பிறகுகூட அதை ஒளிபரப்பின் வழி பார்க்க முடியும்.மாணவர்கள் தங்கள் சொந்த உத்வேகத்தில் கல்வி கற்பதோடு மேம்பாடு காணவிருக்கும் பகுதிகளிலும் கவனம் செலுத்தலாம். குறிப்பாக குறிப்பிட்ட பாடத் திட்டங்களில் நீங்கள் சிரமத்தை எதிர்நோக்கியிருந்தால் இந்தச் செயல்முறையானது உங்களுக்குப் பேருதவியாக இருக்கும்.நீங்கள் உங்கள் தொழிலை மேம்படுத்த விரும்பினாலோ அல்லது முழு நேரக் கல்வி கற்க முடியாமல் போனாலோ அதற்கு இந்த ஆன்லைன் கல்வி முறையே சிறந்த வழியாக அமையும்.உதாரணத்திற்கு நீங்கள் ஒரு குழுமத்தின் நிர்வாகியாகப் பணியாற்றுகின்றீர்கள். அந்தத் துறையில் பதவி உயர்வு பெறுவதற்கு எம்பிஏ கல்வி பயில வேண்டிய சூழல் உருவாகின்றது.

அதற்கு நீங்கள் 2 ஆண்டுகளில் பகுதி நேரமாகப் பயின்று எம்பிஏ பட்டம் பெறலாம். எம்பிஏ பாடத் திட்டம் தவிர ˆOpen University Malaysia (OUM) பல்கலைக்கழகம் மேலும் 54 இளங்கலை, முதுகலைப் பாடத் திட்டங்களை வழங்குகின்றது. வர்த்தகம் – மேலாண்மை, கல்வி, தொழில்நுட்பம் – செயல்பாட்டு அறிவியல், சமூக அறிவியல் -மனிதநேயம் ஆகிய 4 பிரிவுகளில் இந்தப் பாடத் திட்டங்கள் போதிக்கப்படுகின்றன.அதிலும் அனைத்துப் பாடத் திட்டங்களும் மலேசிய தர மதிப்பீட்டு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக திட்டம் – வசதி மேலாண்மையின் அறிவியல் இளங்கலைப் பட்டம், தர மேம்பாட்டு முதுகலைப் பட்டம், வசதிகள் மேலாண்மை முதுகலைப் பட்டம் ஆகிய பாடத் திட்டங்களுக்கு சிரிம் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது.Open University Malaysia (OUM) பல்கலைக்கழகமானது பல நிலைகள் – பின்புலங்களைச் சார்ந்த மாணவர்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக அனைவருக்குமான நவீனத்துவப் பல்கலைக்கழகம் என்ற அடைமொழியைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் அரசாங்க, தனியார்துறைப் பணியாளர்கள், விளையாட்டாளர்கள், பிரபலங்கள் மட்டுமன்றி சிறைக்கைதிகளும்கூட இதில் இடம்பெற்றுள்ளனர்.ஆன்லைன் கல்வி என்பது நீங்கள் சொந்தமாகப் போராட வேண்டும் என்று அர்த்தமல்ல. நாடு முழுவதும் உள்ள 35 கற்றல் மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களுக்கு அருகிலுள்ள கற்றல் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வி மையங்கள் அனைத்து படிப்பு விஷயங்களிலும் ஆதரவு, உதவி, வழிகாட்டுதலை வழங்குகின்றன.

படிக்கும்போது கவுன்சிலிங் முதுகலை முன்னாள் மாணவர், பயிற்சி ஆலோசகர்கள் மூலம் சார்பு ஆலோசகர் சேவைகளை வழங்குவதற்காகத் தனது பாடப்பிரிவு தோழர்களுடன் சேர்ந்து ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவினார். எனவே, ஆன்லைன் கல்வி ஒத்துழைப்பு, தொடர்பை ஊக்குவிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.பாடப் புத்தகங்கள், போக்குவரத்து, தங்குமிட செலவுகளுடன் பாரம்பரிய கல்வி விலை உயர்ந்ததாக இருக்கும் என்பது உண்மைதான். ஆன்லைன் திட்டங்கள் மிகவும் மலிவு, நீங்கள் பயணம் அல்லது இடமாற்றம் பற்றி கவலைப்பட தேவையில்லை.ஆன்லைன் திட்டங்களும் மிகவும் சுவாரஸ்யமானவை. மாணவர்கள் தங்கள் ஸ்மார்ட் போன்கள், பிற மொபைல் சாதனங்களால் எளிதில் திசைதிருப்பப்படுவதால் இந்த நாட்களில் இது முக்கியமானது. ஊடாடும் மல்டிமீடியா, செயற்கை நுண்ணறிவு, கேமிஃபிகேஷன் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மூலம் நீங்கள் கற்றுக்கொள்வது மிகவும் சுவாரஸ்யமாகவும் உந்துதலாக இருக்கவும் முடியும்.ஆன்லைன் கற்றல் தற்போதைய சூழ்நிலையில் முன்னோக்கி செல்லும் வழி, இது உங்கள் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதற்கும் அதே நேரத்தில் உங்கள் கனவுகளுக்குப் பின் செல்வதற்கும் உங்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கும்.இதுவரை 98,000 பேர் அவர்கள் விரும்பும் தகுதிகளுடன் OUMஇல் பட்டம் பெற்றுள்ளனர். ஆன்லைன் கற்றல் மூலம் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தங்களின் சொந்த வேகத்திலும் வசதிக்கேற்றவாறும் படிக்க உதவுவதன் மூலம் மேலும் பலருக்குக் கல்வி கற்பிக்க பல்கலைக்கழகம் விரும்புகிறது.மேல் விவரங்களுக்கு: 03-78012000 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது [email protected] என்ற மின்னஞ்சலில் தகவல் அனுப்பலாம். மேலும் www.oum.edu.my என்ற அகப்பக்கத்தையும் வலம் வரலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here