சிப்பாங், அகஸ்ட்டு 7:
கடந்த ஆகஸ்ட்டு 1 ஆம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் ஏர் கார்கோ வளாகத்தில் சுங்கத்துறை நடத்திய சோதனையில், ரிம17.6 மில்லியன் மதிப்பிலான 88 கிலோகிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது.
இரவு 8 மணியளவில் நடந்த சோதனையில், ஜேகேடிஎம் தலைமையகத்தின் போதைப்பொருள் பிரிவின் குழு, கொக்கெய்ன் இருப்பதாக சந்தேகிக்கப்படும் காப்ஸ்யூல்கள் அடங்கிய 995 கண்ணாடி பாட்டில்களைக் கொண்ட நான்கு பெட்டிகளைக் கைப்பற்றியது என்று,
சுங்கத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ஜாசுலி ஜோஹன் கூறினார்.
ஒவ்வொரு பெட்டியிலும் வாகன உதிரிப் பாகங்கள், அதாவது கார் பிரேக் டிஸ்க்குகள் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது, அதனுடன் மறைத்து குறித்த போதைப்பொருட்கள் அடங்கிய கண்ணாடி போத்தல்களும் இருந்தன.
“ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பல் இதுபோன்ற ஒரு முறையைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை” என்று அவர் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில் நெதர்லாந்தில் இருந்து சரக்கு இறக்குமதி செய்யப்பட்டு, KLIA சரக்கு வளாகத்தில் தரையிறக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
இறக்குமதியாளர் இறக்குமதி ஆவணங்களில் தவறான தகவல்களைப் பயன்படுத்தியதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது, இதனால் இறக்குமதியாளரைக் கைது செய்வது கடினம் என்றும், இருப்பினும் குறித்த கும்பலை கண்டறிய விசாரணை தொடரும் என்றும் அவர் கூறினார்.