டிரெய்லர் நடுரோட்டில் குடைசாய்ந்ததில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் (NSE) போக்குவரத்து நெரிசல்

ஈப்போ, அகஸ்ட்டு 8:

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் -NSE KM183 இல் செம்பனைப்பழங்களை ஏற்றிச் சென்ற டிரெய்லர் சாலையின் நடுவில் குடைசாய்ந்ததில், தெற்கு நோக்கிச் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலாக உள்ளது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று, சம்பவ இடத்தில் இருந்த பேராக் காவல்துறைத் தலைவர், ஆணையர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறினார்.

“பண்டார் பாரு டோல் சாவடிக்கு பக்கத்தில் சம்பந்தப்பட்ட டிரெய்லர் கவிழ்ந்தது. இதனால் தெற்கு நோக்கிச் செல்லும் சாலைப் பயனர்கள் டோல் கேட்டில் இருந்து வெளியேறி, அலோர் பொங்சு டோலைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தைத் தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

“அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது, மேலும் இந்த சம்பவத்தால் அச்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது” என்று அவர் இன்று செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 8) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here