நடிகை காயத்ரி ரகுராம் தான் மொட்டை அடித்துள்ள புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆகியுள்ளனர்.
சார்லி சாப்ளின் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ரகுராம். அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்துள்ள அவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருந்தார். திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கும் காயத்ரி ரகுராம், அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். பாஜகவில் இருந்த அவர் தற்போது அதில் இருந்து விலகி உள்ளார்.
இந்த நிலையில், நடிகை காயத்ரி ரகுராம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். பின்னர் அங்கு மொட்டை அடித்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். மொட்டை அடித்து இருக்கும் காயத்ரி ரகுராமின் புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் ஷாக் ஆன நிலையில், அப்படம் இணையத்தில் வைரலாகியும் வருகிறது.