1.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல்

ஈப்போ, அகஸ்ட்டு 9:

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் தனித்தனியாக நடத்தப்பட்ட சோதனையின் போது, சுமார் 1.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுகளை பேராக் சுங்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக சேகரிக்கப்பட்ட தகவல் மற்றும் உளவுத்துறையின் அடிப்படையில் அமலாக்க அதிகாரிகள் ஜூலை 27 அன்று, காலை 8.15 மணியளவில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் (NSE) டோல் சாவடியிலிருந்து வெளியேறிய பின்னுள்ள சாலைத் தடுப்பில் 40 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.

இந்தக் கைதினைத் தொடர்ந்து, பூச்சோங் மற்றும் பண்டார் பாரு ஸ்ரீ பெட்டாலிங்கில் பல சோதனைகளை நடத்தியது.

“அந்த சோதனைகளில் வரி செலுத்தப்படாத பல்வேறு பிராண்டுகள் அடங்கிய சிகரெட்டுகளை பறிமுதல் செய்வதில் சுங்கத்துறை வெற்றி பெற்றது,” என்று அவர் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 9) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 135 (1) (d) மற்றும் (e) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அப்துல் கஃபர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here