புக்கிட் மெர்தாஜாம், ஆகஸ்ட்டு 10 :
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் பிரச்சினையைத் தடுக்கும் வகையில், இடைநிலைக் கல்வியை கட்டாயமாக்கும் முயற்சியை இறுதி செய்யும் முயற்சியில் கல்வி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது என்று, கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடெக் கூறினார்.
புதிய கொள்கையின் கீழ் சிஜில் பெலஜாரன் மலேசியா (SPM ) நிலை வரை குழந்தைகள் படிக்க வேண்டியிருந்தால், இடைவிலகல் பிரச்சினை ஏற்படாது என்று அவர் கூறுகிறார்.
பாலர்பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பிரச்சினைகளை தற்போது நாடு எதிர்கொள்கிறது, ஆனால் ஆரம்பப் பள்ளிகளுக்கு இப்பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.