ஈப்போ, பூத்தேக் ஒன்றில் புதன்கிழமை (ஆகஸ்ட் 9) கொள்ளையடித்த மர்மநபரை பத்து காஜா போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பத்து காஜா காவல்துறை உதவி ஆணையர் முகமட் ராய் சுஹைமி சரீப் கூறுகையில், சந்தேக நபர் சுமார் RM7,000 மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளுடன் மாலை 3.30 மணியளவில் தப்பி ஓடிவிட்டார்.
சந்தேக நபர் சாம்பல் நிற நீண்ட கை சட்டை, கருப்பு நீண்ட பேன்ட், கருப்பு நிற வைசர் மற்றும் வெள்ளை ஷூவுடன் கருப்பு மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் அணிந்திருந்தார் என்று அவர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) ஒரு அறிக்கையில் கூறினார். கொள்ளையன் ஒரு ஆடவர் என்று நம்பப்படுகிறது. தகவல் தெரிந்தவர்கள், புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக் நூர்ஹிதாயா உமரை 013-397 6564 என்ற எண்ணில் அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு மையத்தை 05-365 4322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு குற்றவியல் சட்டம் பிரிவு 392 இன் கீழ் (கொள்ளைக்காக) விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.