கோலா நெராஸ், ஆகஸ்ட்டு 11 :
நேற்றிரவு 51 வயதுடைய வாடகைக்கார் ஓட்டுநர் ஒருவர் உடலின் பின்பகுதியில் பல காயங்களுடன் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
செபெராங் தாகிரில் உள்ள கிளினிக் அருகே வாடகைக்காரின் பின் இருக்கையில் ரத்த வெள்ளத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று இரவு 10.56 மணியளவில் பொதுமக்களிடம் இருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்று, கோலா திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அப்துல் ரஹீம் மத் தின் கூறினார்.
உடனே கள ஆய்வுக்காக சம்பவ இடத்திற்கு ஒரு போலீஸ் குழு அனுப்பப்பட்டதாகவும், டாக்ஸியில் இருவர் இருப்பதைக் கண்டுபிடித்ததாகவும் அவர் கூறினார்.
“மேலும் சோதனையில், ஓட்டுநர் இருக்கையில் இரத்த வெள்ளத்தில் ஒரு நபர் அமர்ந்திருந்தார், அதே நேரத்தில் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு நபர் பலத்த காயமடைந்து, மயக்கமடைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டார்.
“இதைத் தொடர்ந்து, மருத்துவ அதிகாரியின் பரிசோதனையில் பின் இருக்கையில் இருந்த ஆடவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
“மேலும் விசாரணைக்காக ஓட்டுநரின் காலடிக்கருகில் கிடைத்த கத்தியையும் போலீசார் கைப்பற்றினர்,” என்று அவர் சம்பவ இடத்தில் சந்தித்தபோது கூறினார்.
இதற்கிடையில், முதற்கட்ட விசாரணையில் பலியானவர் வாடகைக்கார் ஓட்டுநர் என்றும், 29 வயதான சந்தேக நபர் ஒரு பயணி என்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக அப்துல் ரஹீம் கூறினார்.
சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“உடல் பிரேத பரிசோதனைக்காக கோலா திரெங்கானுவில் உள்ள சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்கு (HSNZ) அனுப்பப்பட்டுள்ளது.
“இதற்கிடையில், சந்தேக நபர், விளக்கமறியலில் வைக்க விண்ணப்பத்திற்காக இன்று காலை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். “இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரிக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.நன்றி NST