ஈஃபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈஃபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து கோபுரத்தின் மூன்று தளங்களில் உள்ள பார்வையாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஈஃபிள் கோபுரம் பிரான்ஸில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற சின்னங்களுள் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் அதிக அளவிலான பார்வையாளர்கள் வருகை புரிவது வழக்கம். கடந்த ஆண்டு ஈஃபிள் கோபுரத்துக்கு 62 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில், ஈஃபிள் கோபுரத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து கோபுரத்தின் மூன்று தளங்களில் உள்ள பார்வையாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுட்டது.

இதனை தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் ஈஃபிள் கோபுரத்தில் வெடிகுண்டு இருக்கிறதா என சோதனை நடத்தினர். இதுபோன்ற தருணங்களில் இந்த மாதிரியான சோதனைகள் வழக்கமாக நடைபெறுவதுதான் என ஈஃபிள் கோபுர பராமரிப்பு அதிகாரிகள் கூறினர். இது போன்ற சோதனைகள் ஈஃபிள் கோபுரத்தில் நடத்தப்படும் சூழல் அமைவது மிக அரிதான நிகழ்வாகும் என தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here