ஐந்து வயதில் மூன்று உலக சாதனைகள்: அசத்தும் சிறுவன்

கோவை:

முதலாம் வகுப்பு படிக்கும் ஐந்து வயதான சித்தார்த் மூன்று உலக சாதனைக ளைப் புரிந்துள்ளான்.

கோவையைச் சேர்ந்த இச்சிறுவன் அனைத்துலக அளவில் நடைபெற்ற பல்வேறு தற்காப்பு தொடர்பான முப்பதுக்கும் மேற்பட்ட போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தி உள்ளான்.

இந்நிலையில், செப்டம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள போட்டிகளில் பங் கேற்க உள்ளான் சித்தார்த். மூன்று வயதிலேயே யோகாசனப் பயிற்சி மேற்கொண்ட இச்சிறுவன், 25 நிமிடங்கள் முட்டைகள்மீது அமர்ந்து முதல் சாதனையைப் படைத் தான்.

அதன் பின்னர் குங்ஃபு தற்காப்புக் கலையில் சில நுணுக்கமான அசைவுகளைச் செய்துகாட்டியதும் சித்தார்த்தின் மற்றொரு சாதனையாகும். இதையடுத்து, தாய்லாந்து போட்டியில் வாகை சூட இச்சிறுவனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here