“மூடாவின் மோசமான தோல்விக்கு முழுப் பொறுப்பேற்கிறேன்” – சையத் சாதிக்

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 13:

நடந்து முடிந்த நாட்டின் 15வது மாநிலத்தேர்தலில், தமது கட்சியின் மோசமான தோல்விக்கு முழுப்பொறுப்பேற்பதாக மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் (MUDA ) தலைவர் சையத் சாதிக் சையது அப்துல் ரஹ்மான், கூறினார்.

எவ்வாறாயினும், இளம் தலைவர்கலைக் கொண்ட எனது கட்சி போட்டியிட்ட அனைத்து 19 இடங்களிலும் தோல்வியடைந்தது ஒரு ‘முதிர்ச்சியடைந்த அனுபவமாக’ இருக்கும் என்றும் மூவார் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

வாக்காளர்களின் விருப்பங்களை கட்சி மனதார ஏற்றுக்கொள்கிறது என்றும், மாநில தேர்தல்கள் முடாவின் நீண்ட பயணத்திற்கு இது ஒரு முதல் படி என்றும் அவர் கூறினார்.

“வேட்பாளர்கள் தங்களால் இயன்றவரை முயற்சித்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன், ஆனால் ஒரு கட்சியின் தலைவராக, நான் இன்னமும் சிறப்பாகச் செய்ய வேண்டும். மூடாவில் இது எங்களுக்கு மிகவும் புதுமையான அனுபவம்,” என்று தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறினார்.

மூடா போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் அவர்களின் வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here