மூவார், ஆகஸ்ட்டு 16:
இந்த மாத தொடக்கத்தில் ஐந்து வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் பள்ளி வேன் ஓட்டுநர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்ட குமார் முனியாண்டி, 51, மீதான குற்றச்சாட்டுகள், நீதிபதி அபுபக்கர் மனாட் முன் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்டது. இருப்பினும் அவர் தனக்கு எதிரான குற்றச்ச்சாட்டுக்களை மறுத்து, விசாரணை கோரினார்.
குற்றச்சாட்டின்படி, பள்ளி வேனின் உரிமையாளரான குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமியின் உடல் மற்றும் கால்களைத் தொட்டதாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிற்பகல் 12.30 முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் குளுவாங்கில் உள்ள ஒரு மழலையர் பள்ளியிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரை அழைத்துச் சென்றபோது, இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14 (a) இன் படி குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 16 (1) உடன் படிக்கப்பட்டது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படும், அத்தோடு பிரிவு 16 (1)ன் படி ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மற்றும் இரண்டு தடவைகளுக்கு குறையாத பிரம்படி தண்டனையும் கூடுதலாக விதிக்கப்படலாம்.
குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகாத நிலையில், அவரை ஒரு தனிநபர் உத்தரவாதத்துடன் RM10,000 ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது, அத்தோடு வழக்கை மீண்டும் செவிமடுப்பதற்கு செப்டம்பர் 25 ஆம் தேதியை நிர்ணயித்தது.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் மாதம் ஒருமுறை குளுவாங் காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தலையிடக் கூடாது என்றும் நீதிமன்றம் கூடுதல் நிபந்தனைகளை விதித்தது.