செப்டம்பர் 25 முதல் திருமணத்தை இணையம் வழி பதிவு செய்யலாம் -சிங்கை அதிரடி அறிவிப்பு

சிங்கப்பூரில் மணமக்கள் அவர்களின் திருமணத்தை விரைவில் இணையம் வழியே பதிவு செய்து கொள்ளலாம்.

திருமணப் பதிவகமும், முஸ்லிம் திருமணப் பதிவகமும் அதற்கென ‘Our Marriage Journey’ எனும் வலைத்தளத்தை மேம்படுத்தியுள்ளன. அடுத்த மாதம் 25 ஆம் தேதியிலிருந்து மணமக்கள் இணையம் வழியே திருமணத்தைப் பதிந்து கொள்ளலாம் எனக் கூறப்ப்படுகிறது.

திருமண விண்ணப்பம் முதல் சான்றிதழ் வழங்குவது வரை அனைத்து நடைமுறைகளும் மின்னிலக்கமயமாகின்றன. கூடுதலாக, அவர்கள் மின்னிலக்கச் சான்றிதழைப் பெற விரும்பினால், சடங்குபூர்வச் சான்றிதழையும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் குறித்த சான்றிதழில் அவர்கள் கையெழுத்திடவும் முடியும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here