பினாங்கில் இருந்து சென்று Kollywoodஐ கலக்கும் நம்ம ஊருப்பொண்ணு ..

கோலாலம்பூர், அகஸ்ட்டு 16:

மலேசியாவின் பினாங்கின் பிறந்த நடிகை ஹம்ஷினி பெருமாள், தற்போது Kollywood ல் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

ஹம்ஷினி பெருமாளின் அட்டாகாசமான நடிப்பில் தற்போது “லாக் டவுன் நைட்ஸ் ( Lock Down Nights )’ திரைப்படம் வெளியீடு காணவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத் திறமை கொண்ட இசையமைப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநர் விஜய் ஆண்டனி அவர்களால் வெளியிடப்பட்ட “லாக் டவுன் நைட்ஸ் “ திரைப்படப் போஸ்டரைப் பார்க்கும்போது, ஹம்ஷினி பெருமாளின் திரையுலக பயணம் அடுத்த மைல் கல்லை நோக்கி நகருகிறது என்பதில் ஐயமில்லை.

இந்த திரைப்படத்தில், நடிகை ஹம்ஷினி பெருமாள் திறமையான கோலிவுட் நடிகர் வெற்றியுடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறார்.

ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையிலிருந்து சரவணன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய S.S.ஸ்டான்லி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் மலேசியாவில் நடைபெற்றுள்ளது.

இவர் Netflix ல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட “பூச்சாண்டி” திரைப்படத்தில் தனது நடிப்பினால் இரசிகர்களை தன்வசம் இழுத்துக்கொண்ட இவர், மலேசியப் படங்களிலும், ஆஸ்ட்ரோ மற்றும் ஆர்டிஎம் தொடர்களிலும் மறக்கமுடியாத கதா பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here