ஷா ஆலாம் விமான விபத்து ; சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹாருன் உட்பட 10 பேர் பலி!

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 17:

இன்று பிற்பகல் ஷா ஆலாமில் உள்ள எல்மினா குடியிருப்புப் பகுதிக்கு அருகில் உள்ள கெத்ரி நெடுஞ்சாலையில், லங்காவியில் இருந்து சுபாங்கிற்கு பயணம் செய்த ஒரு தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.

இன்று பிற்பகல் 2.40 மணியளவில், இரண்டு விமானிகள் மற்றும் அவரது உதவியாளருடன் ஆறு பயணிகளை ஏற்றிச் சென்ற இலகுரக விமானம், எல்மினாவில் விபத்துக்குள்ளாகும் முன் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் விபத்தில் ஒரு காரும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் சம்மந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது என்று, சிலாங்கூர் காவல்துறைத் தலைவர், டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

இவ்விபத்தில் பகாங்கின் பெலாங்கை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜொஹாரி ஹருன், கைரில் அஸ்வான் ஜமாலுடின், ஷஹாருல் அமீர் உமர், முகமட் நைம் ஃபவ்வாஸ் முகமது முஐடி,  முஹமட் தௌபிக் முகமது ஜாக்கி, இட்ரிஸ் அப்துல் தாலிப் @ ரமாலி, ஷாருல் கமால் ரோஸ்லான் மற்றும் ஹெய்கல் அரஸ் அப்துல் அசிம் ஆகியோர் அடங்குவதாக கூறப்படுகிறது.

இவ்விபத்தில் உயிரிழந்த அனைவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here