படகின் குளிரூட்டிக்கான எரிவாயு தொட்டி வெடித்து சிதறியதில் மீனவர் பலி

மெர்சிங்: புலாவ் திங்கியில் படகின் குளிரூட்டிக்கான எரிவாயு தொட்டி வெடித்து சிதறியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் நடந்த இடத்திலேயே 43 வயதான அரோடி சுலைமான் என்ற மீனவர் தலையில் காயம் காரணமாக உயிரிழந்ததாக மெர்சிங் காவல்துறை தலைவர் அப்துல் ரசாக் அப்துல்லா சானி தெரிவித்தார்.

மீனவரின் 59 வயது நண்பர் மாமட் மேன் பலத்த காயம் அடைந்து மெர்சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், படகின் கேப்டன் ஆரிஃபின் முகமது (57) லேசான காயம் அடைந்ததாகவும் அவர் கூறினார். மற்றொரு குழு உறுப்பினர் அஸ்ரி சே சோ 43, காயமின்றி தப்பினார். நான்கு பேரும் மீன்பிடிக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர்களில் மூவர் உறங்கிக் கொண்டிருந்த போது, நான்காவது நபர் படகை தீவின் கடல் பகுதியில் செலுத்தினார்.

இருப்பினும், குளுரூட்டியின் கேஸ் சிலிண்டர் இருக்கும் பெட்டியில் வெடிப்பு ஏற்பட்டது. படகு இன்னும் இயங்கும் நிலையில் உள்ளது, மேலும் விசாரணைக்காக என்டாவ் ஜெட்டிக்கு மீண்டும் கொண்டு வரப்படும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here