மொழியாலும் இனத்தாலும் சினிமாவை பிரிக்க முடியாது- ஜான்வி கபூர்

நடிகை ஸ்ரீதேவி- போனி கபூர் தம்பதியரின் மகள் ஜான்வி கபூர். 2018-ம் ஆண்டில் ‘தடாக்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். அடுத்த கட்டமாக தெலுங்கு சினிமாவில் கால் பதித்து ஜூனியர் என்.டி.ஆர். உடன் ஒரு படத்தில்ஜோடி சேர்ந்து நடித்தார்.

இந்தநிலையில் ஜான்வி கபூர் கூறியதாவது:- தென்னிந்திய சினிமாவும் இந்தி திரை உலகமும் ஒரே பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றன. மொழியாலும் இனத்தாலும் சினிமாவை பிரிக்க முடியாது. தற்போது டப்பிங் படங்கள் ஏராளமாக வருகின்றன. இதனால் மொழி ரசிகர்களுக்கு முட்டுக்கட்டையாக இல்லை. ஓ.டி.டி. தளங்கள் இருப்பதனால் நல்ல கதைகள் தலைப்புகள் கிடைக்கின்றன. அதை நாங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறோம்.

நான் நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு தூரம் என்னால் நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நடித்து வருகிறேன். அப்போதுதான் என்னுடைய நடிப்பு திறமையை கண்காணிக்க முடியும்.

சினிமாவில் நல்ல முறையில் நடனம் ஆடவும், நகைச்சுவை பண்ணவும் ஆசை. எனது அம்மாவிற்கு தென்னிந்திய சினிமாவில் தான் அறிமுகம் கிடைத்தது. அதனால் அவருக்கு அங்கு அன்பும் கிடைத்தது. எனது தகுதியை நிரூபிக்க இதுதான் சரியான நேரம் என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here