கோலாலம்பூர் –
தமது கிளப் வணிக உரிமத்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்புத்தெரிவித்து, கோலாலம்பூர் மாநகர மன்றதிற்கு (DBKL) எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கினை கிராக்ஹவுஸ் காமெடி கிளப்பின் இரண்டு உரிமையாளர்களும் இன்று வாபஸ் பெற்றுள்ளனர்.
முகமட் ரிசல் ஜோஹன் வான் கெய்சல் மற்றும் ஷங்கர் ஆர்.சந்திரம் ஆகியோரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். பிரவின், தனது கட்சிக்காரர்கள் குறித்த விண்ணப்பத்தை (DBKLக்கு எதிரான வழக்கை) தொடர விரும்பவில்லை என்று கூறினார்.
இந்நிலையில் கோலாலம்பூரில் தங்கள் வணிகத்தை பதிவு செய்வதிலிருந்து அவர்கள் (முகமது ரிசல், ஷங்கர்) ஒருபோதும் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதை DBKL தனது தரப்பில் உறுதிப்படுத்தியது.
“எனவே, இந்த விண்ணப்பத்தை நாங்கள் திரும்பப் பெறுகிறோம்,” என்று அவர் இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகளில் கூறினார்.
தமது நகைச்சுவை கிளப்பின் வணிக உரிமத்தை ரத்து செய்து, கோலாலம்பூரில் வாழ்நாள் முழுவதும் எந்த வணிகத்தையும் பதிவு செய்ய தடை விதித்தது அரசியலமைப்பிற்கு எதிரானது எனக்கூறி, முஹமட் ரிசால் மற்றும் ஷங்கர் ஆகியோர், கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி நீதித்துறை மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது ,