குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டிய அஜித்குமார்!

துணிவு படத்தைத் தொடர்ந்து கடந்த மே மாதம் அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைத்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு புணேவில் தொடங்கமெனவும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.

இந்நிலையில், அஜித்குமார் ஜெர்மனி, நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகளில் பைக் ரைடை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிளிங் சென்றிருக்கிறார், அங்கு எடுக்கப்ட்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here