அணிவகுப்பின் போது சரிந்து, விழுந்த ரேலா உறுப்பினர் மரணம்

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடந்த 66வது சுதந்திர தின விழாவையொட்டி நடந்த அணிவகுப்பில் பங்கேற்ற மலேசிய தன்னார்வப் படை (RELA) உறுப்பினர் ஒருவர், திடீரென சரிந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முஹமட் நோஹ் முஹமட் இசா, 53, என அடையாளம் காணப்பட்ட ரேலா உறுப்பினர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்பதை துவாங்கு ஜாபர் மருத்துவமனையின் (HTJ) மருத்துவர்கள் குழு உறுதிப்படுத்தியது.

இன்று மதியம் 12.25 மணியளவில் HTJ அவசர சிகிச்சைப் பிரிவில் ஒருவர் இறந்தது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது என்றும், இறந்தவர் நெகிரி செம்பிலான் ரேலா குழுவின் தலைவர் என்றும் கண்டறியப்பட்டதாகவும் சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அரிபாய் தாராவே கூறினார்.

இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here