இசையமைப்பாளர் தஷி சாலை விபத்தில் மரணம்

மலையாளத் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான வீ.தஷி சாலை விபத்தில் பலியானார். அவர் பல்வேறு தமிழ்ப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

கேரள அரசின் சிறந்த பின்னணி இசை அமைப்பாளருக்கான விருது பெற்ற வீ.தஷி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வாட்டாகுடி கிராமத்தில் பிறந்தவர்.

இவரது தந்தை பாரதிமோகன் இரண்டு தமிழ்ப் படங்களைத் தயாரித்தவர்.

மலையாளத்தில் ‘தந்த்ரா’ என்ற படம் மூலம் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே சிறந்த பின்னணி இசைக்கான கேரள அரசின் விருதைப் பெற்றார்.

திரை உலகத்திற்காக தனது பெயரை வீ.தஷி என்று மாற்றிக் கொண்டார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள தஷி, 90 பாடகர்களையும், 160 பாடலாசிரியர்களையும் இசை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

கோவை அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்த அவருக்கு வயது 49. திருமணமாகி மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here