அண்மையில் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன குறித்த பேச்சுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பலை உருவாகியுள்ளது. இந்து அமைப் பினர் மற்றும் பாஜகவைச் சேர்ந்த பலரும் அவருக்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவு செய்து வருவதுடன், அவர்மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
சனாதனம் குறித்த கருத்தை உதயநிதி வாபஸ் பெறாவிட்டால், மகாராஷ்டி ராவிற் குள் நுழைய முடியாது” என அம்மாநில அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா எச்சரித் துள்ளார். மேலும் இந்திய பிரதமர் மோடிஉம இது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தயிருந்தார்.
இந்த நிலையில், ’உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி’ என அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை வாளால் கிழித்து தீயிட்டு கொளுத்தும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
முன்னதாக, முதல்வர் கருணாநிதியின் தலையை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும்; அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்கு வார்கள் என்று ராம்விலாஸ் வேதாந்தி 2007 ஆம் ஆண்டு தெரிவித்து இருந்தது குறிப் பிடத்தக்கது. ராமர் குறித்தும் ராமர் பாலம் குறித்து பேசிய விவகாரத்தில் அவர் இவ்வாறு தெரிவித்து இருந்தார்.
இதனிடையே இந்த விவகாரத்தை எதிர்த்து மலேசிய இந்துதர்ம மாமன்றம் சுமார் 23 சமுக நலன் சார்ந்த இயக்கங்களை ஒன்று திரட்டி சனாதன தர்மம் குறித்த தேவையற்ற கருத்துக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் “ஒன்றிணைந்து தர்மத்தை நிலைநாட்டுவோம்” என்ற தொனிப்பொருளில், இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக அமைதி வழி போராடடம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
இன்று 07 செப்டம்பர் 2023 (வியாழன்), சுமார் மதியம் 12.00 மாணியளவில் இந்த பேரணி நடைபெறும் என மலேசிய இந்துதர்ம மாமன்ற துணைத்தலைவர் ரிஷி குமார் வடிவேலு (012-2016115) தெரிவித்துள்ளார்.
NGO வருகை பட்டியல் பின்வருமாறு :-
1) Malaysia Hindhudharma Maamandram
2) Hindu Sevai Sangam
3) World Hindu Council
4) Pertubuhan Atmavidya Vanam Malaysia
5) United Malaysian Hindu Voice
6)Penang Hindu Association
7) Malaysia Hindu Sangam
8)Gopio
9) Telugu Association of Malaysia
10) Persatuan Penganut Shirdi Sai Samasthanam Selangor
11)Hindu Agamam Ani
12) Global Hindu Heritage Organisation
13) Gurukal Sangam , Malaysia
14) Malaysian Hindu Lawyers Association.
15)Olivilaku Ngo
16) Malaysian Hindu Youth Council (HYO)
17) Hindraf
18)Persatuan Thirukkural
19)Malaysia Sri Aathi Sankarar Thirumadam
20) Sri Sakthi Ashram Malaysia
21)Laksmi Poojai Dhyana Mandram
22)MIRA PARTY
23) Social Entrepreneurs Network (SeNet)