பெட்டாலிங் ஜெயா:
உள்நாட்டில் விளைவிக்கப்படும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியாக, உள்ளூர் வெள்ளை அரிசியை விற்பனை செய்வதில் ஒரு கட்டுப்பாட்டை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.
அதாவது வாடிக்கையாளர் ஒருவர் அத்திகபட்சம் 100 கிலோ மட்டுமே கொள்முதல் செய்ய முடியும் என்றும், உள்ளூர் வெள்ளை அரிசி விநியோகம் சீராகும் வரை இந்த கொள்முதல் வரம்பு அமுல்படுத்தப்படும் எனவும், விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்தின் விவசாயத் தொழில்துறை அபிவிருத்தி பிரிவு செயலாளர் டத்தோ அஸ்மான் மஹ்மூட் தெரிவித்தார்.
உள்ளூர் மளிகைக் கடைகளில் உள்ளூர் அரிசி தட்டுப்பாடு நிலவுவது குறித்த பிரச்ச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக, குறித்த கொள்முதல் வரம்பின் முதல் கட்டம் நாளை தொடங்கும் என்றும், இரண்டாம் கட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கும் என்றும் அஸ்மான் கூறினார்.
செப்டம்பர் 15 முதல் பாசார் தானி மற்றும் அதன் கிளைகளில் கூட்டரசு விவசாய சந்தை அதிகாரசபை (Fama) இந்த வரம்பை அமல்படுத்தும்,” என்று அவர் கூறினார்.
உள்நாட்டு அரிசி வழங்கலானது உள்நாட்டில் அறுவடை செய்யப்படும் நெல்லின் அளவைப் பொறுத்தது என்று அஸ்மான் மேலும் குறிப்பிட்டார்.