பிரதமரை சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சந்தித்தார்.

“ஆசியா மற்றும் உலக அரங்கில் மிகப்பிரபலமான இந்தியத் திரைப்பட நட்சத்திரமான ரஜினிகாந்தை நான் இன்று சந்தித்ததேன். எனது போராட்டத்திற்கு குறிப்பாக மக்களின் துயரம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பானவற்றிற்கு அவர் எனக்கு அளித்த மரியாதையைக் கண்டு நான் வியக் கிறேன் அத்தோடு அவரைப் பாராட்டுகிறேன்” என்று பிரதமர் தனது முக நூலில் பதிவிட்டுள்ளார் .

மேலும் இந்த சந்திப்பில் சாதாரணமாக பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன, எதிர் காலத்தில் அவரது படங்களில் எனது சமூக போராட்டத்தின் கூறுகளுடன் நிச்ச யமாக இடம்பெற முயற்சிப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்த்தார் என பிரதமர் இப்பதிவில் கூறினார்.

அத்தோடு “ரஜினிகாந்த் தொடர்ந்தும் திரையுலகில் சிறந்து விளங்க பிரார்த் திக்கிறேன்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here