அன்னை அன்பு முகத்தில் ஆண்டவனை கண்டிடலாம்.. வெளியானது சந்திரமுகி-2 பாடல்

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாடலான ‘தோரி போரி’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதில், இடம்பெற்றுள்ள ‘அன்னை அன்பு முகத்தில் ஆண்டவனை கண்டிடலாம்’ போன்ற வரிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here