நாடாளுமன்றத்தில் மலாய்க்காரர் அல்லாத பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் -பெரிக்காத்தான் எம்.பி

கோலாலம்பூர்:

நாடாளுமன்றத்தில் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அதற்கு சிங்கப்பூரின் குழு பிரதிநிதித்துவ தொகுதி (GRC ) முறையை மலேசியா பின்பற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற தெரிவித்த்துள்ளார்.

மலேசியா தேர்தல் முறையை சீர்திருத்த வேண்டிய நேரம் இது என்றும், 1957 இல் அப்போதைய மலாயாவின் கூட்டாட்சி அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது தற்போதைய தேர்தல் முறை தீர்மானிக்கப்பட்டது என்பதையும் டத்தோஸ்ரீ ஷாஹிடன் காசிம் (PN-Arau) கூறினார்.

மலேசிய மக்கள்தொகையில் பூமிபுத்திரர்கள் 70.1 விழுக்காட்டினரும், சீனர்கள் 22.6 விழுக்காட்டினரும் மற்றும் இந்தியர்கள் 6.6 விழுக்காட்டினரும் உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“சிங்கப்பூரில் உள்ள GRC அமைப்பு மலாய்க்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை அனுமதிப்பதால் நான் விரும்புகிறேன். மலேசியாவில் உள்ள சிறுபான்மையினருக்கும் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

“இந்த முறையைப் பின்பற்றினால், 6.6 விழுக்காடு மக்கள்தொகை கொண்ட இந்திய சமூகம் நாடாளுமன்றத்தில் 16 இடங்களைப் பெறும், ஆனால் இப்போது நிலைமையைப் பாருங்கள்.

அத்தோடு “சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட பூமிபுத்திரர்கள் 70 இடங்களையும், சீனர்கள் 46 இடங்களையும் பெறுவார்கள் என்றும், இந்த செயல்முறையை தயவுசெய்து பரிசீலியுங்கள் ”என்று அவர் இன்று வியாழன் (செப். 14) அன்று 12வது மலேசியத் திட்ட இடைக்கால மதிப்பாய்வைப் பற்றி விவாதிக்கும் போது மக்களவையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here