ஜோகூர் :
நாட்டில் வெங்காயம், பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றின் விலை 30 முதல் 40 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த திடீர் விலை ஏற்றம் காரணமாக நுகர்வோர்கள், குறிப்பாக உணவு வியாபாரிகள் அதிகளவில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தாம்போய் மற்றும் மசாய் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், முன்பு ஒரு கிலோவிற்கு RM5 முதல் RM6 வரை இருந்த சின்ன வெங்காயத்தின் விலை, தற்போது RM9 முதல் RM13 வரை உயர்ந்துள்ளது.
அதுபோல முன்னர் ஒரு கிலோவிற்கு RM5 மட்டுமே இருந்த பூண்டு கிட்டத்தட்ட RM9 ஆக உயர்ந்தது, அதே நேரத்தில் RM13 ஆக இருந்த காய்ந்த மிளகாய் தற்போது RM21 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது எனக் கூறப்படுகிறது.