பெட்டாலிங் ஜெயா:
“மலேசியாவைக் காப்பாற்றுவோம் ” பேரணியில் பங்கேற்றவர்கள் மீது அதிகாரிகள் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று முன்னாள் சட்ட துணை அமைச்சர் முகமட் ஹனிபா மைடின் தெரிவித்தார்.
சனிக்கிழமை (செப்டம்பர் 16), எந்தவித அசம்பாவிதமும் இன்றி குறித்த பேரணி நிறைவு பெற்றது.
இந்நிலையில் இவாறான பல பேரணிகளில் கலந்துகொண்ட பல பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களை அமைதியான கூட்டமைப்புச் சட்டம் 2012 ன் கீழ், போராடிப் பாதுகாத்து வந்ததேன் என்று கூறிய அவர், “எல்லாவற்றுக்கும் மேலாக, பெரும்பாலான அமைச்சரவை உறுப்பினர்கள் ”School of Peaceful Assembly’யின் ‘பட்டதாரிகள்’ மற்றும் நான் அவர்களின் வழக்கறிஞராக இருந்தேன்” என்று அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) வெளியிட்டுள்ள ஒரு ஃபேஸ்புக் பதிவில் ஹனிபா கூறினார்.