இதயத்திலும் ஆன்மாவிலும் சித் ஸ்ரீராம் 3.0 வசீகரக் குரலோன் சித் ஸ்ரீராம்

வூட்மார்க் ஈவண்ட்ஸின் ஆஸ்தான இசை நாயகன்

பிரபலப் பாடகர் சித் ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 7ஆம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது.

இதயங்களிலும் ஆன்மாவிலும் சித் ஸ்ரீராம் 3.0 (அட் த ஹாட் – சோல் 3.0 லைவ் இன் கே.எல்.)சீ என்ற இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி  புக்கிட் ஜாலில், அக்ஸியாத்தா அரேனா அரங்கில் நடைபெறுகிறது. வூட் மார்க் ஈவண்ட்ஸ் நிறுவனம் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியைப் படைக்கிறது. ஏற்கெனவே வூட் மார்க்கின் ஏற்பாட்டில் கடந்த 2019, 2020, 2022ம் ஆண்டுகளில் சித் ஸ்ரீராமின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் கோலாலம்பூரிலும் பினாங்கிலும்  நடைபெற்றதோடு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவிலும் நடைபெற்றன.

ஐந்தாவது தடவையாக சித் ஸ்ரீராமைக் கொண்டு மலேசியாவில் இப்போது நிகழ்ச்சியைப் படைக்கிறது. வூட் மார்க்கின் ஆஸ்தான பாடகராகவே சித் ஸ்ரீராம் இப்போது வளையவருகிறார்.   ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாக அவரை வைத்தே மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக வூட் மார்க் தரப்பு தெரிவித்தது.

வூட்மார்க்

வூட்மார்க் ஈவண்ட்ஸ் கடந்த 2018ஆம் ஆண்டு தோற்றம் கண்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டு நிர்வாகம் –

ஆலோசனைகளுக்காக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. அனைத்துலக ரீதியில் உயர்தரம் வாய்ந்த சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை உருவாக்கும் உன்னத நோக்கத்தின் அடிப்படையில் இந்த வூட்மார்க் ஈவண்ட்ஸ் அமைக்கப்பட்டது. மலேசியாவை மையமாகக் கொண்டு செயற்படும் இந்த நிறுவனம் நிபுணத்துவ ஆற்றலையும் திறமையையும் முதன்மை தாரகமந்திரமாகக் கொண்டு பல பிருமாண்ட நிகழ்ச்சிகளைப் படைத்திருக்கிறது.

உள்நாட்டிலும் அனைத்துலக நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் தரம் வாய்ந்த நிகழ்ச்சிகள் முத்திரைப் பதித்துள்ளன. இந்நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த சாதனைப் படைத்தவை என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

வூட்மார்க்கின் இணையத்தளப் படைப்புகளும் கடந்த 5 மாதக் குறுகிய காலகட்டத்திற்குள் 128,000ஆக அதிகரித்து சாதனைப் படைத்திருக்கிறது. இசையை மையமாகக் கொண்டு 12 மணி நேரத்திற்குள் வலைத்தள விற்பனைகளின் மூலம் 1,400 டிக்கெட்டுகளை விற்று சாதித்திருக்கிறது வூட்மார்க் ஈவண்ட்ஸ். சிறந்த பல இசைப்படைப்புகளை இன்னும் அதிகமாகப் படைக்க வேண்டும், ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற கடப்பாட்டைக் கொண்டு இந்த நிறுவனம் பீடு நடைபோடுகிறது.

இதயங்களிலும் ஆன்மாவிலும் சித் ஸ்ரீராம் 3.0, மலேசிய ரசிகர்களுக்குக் இசை விருந்து கொண்டாட்டமாக அமையும். அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறும் இந்த இசைநிகழ்ச்சியும் மாபெரும் வெற்றியடையும் என்பதில் ஐயமேயில்லை. இந்த இசைப் படைப்பிற்கும் டிக்கெட்டுகள் நிச்சயம் விற்றுத் தீரும் என்று வூட்மார்க் ஈவண்ட்ஸ் அறிக்கை வழி தெரிவித்திருக்கிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here