கோலாலம்பூர்:
உலகில் உள்ள மொத்தம் 195 நாடுகளையும் சுற்றிப்பார்த்த மலேசியாவின் முதல் சுற்றுலா வழிகாட்டி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் லீ சே லூங்.
இவரது இந்த சாதனை மலேசியாவின் சாதனைப் புத்தகத்தில் கடந்த ஜனவரியில் இடம்பிடித்தது.
47 வயதான லீ, 1996 ஆம் ஆண்டு முதல் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருபவர், தனக்கு சிறுவயதில் இருந்தே பயணம் செய்வதில் ஆர்வம் இருந்தது என்றும் பல்வேறு பயண நிறுவனங்களில் பணியாற்றும் போது, இந்த நாடுகளுக்கு தான் சென்றதாகவும் அவர் கூறினார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான லீ, மலேசிய சாதனைப் புத்தகத்தின் மூலம் பெற்ற இந்த அங்கீகாரத்தைப் பற்றி பெருமிதம் கொள்வதாகவும், ஒரு பயண நிபுணராக தன்னால் முடிந்ததை எப்போதும் செய்ய முயற்சிப்பதாகவும் கூறினார்.
“இந்த அங்கீகாரம், புதிய விஷயங்களைத் தொடர்ந்து முயற்சி செய்வதற்கான தைரியத்தை எனக்குள் ஊட்டியது மட்டுமல்லாமல், எனது இந்த சாதனைக்கான ஒரு முக்கிய சான்றாகவும் இருக்கிறது” என்று அவர் கூறினார்.